எந்த கல்வி யாருக்கு ஜோதிடம் என்ன சொல்கிறது

 ஜோதிடத்தில்  கல்வி


    லக்னத்திலிருந்து 5 ஆம் அதிபதியும், வியாழனிலிருந்து 5 ஆம் அதிபதியும் கல்வியை தீர்மானிக்க உதவுகிறார்கள், அவர்கள் எந்த ராசியில் இருந்தால் என்னென்ன கல்விகளை பயில்வார்கள் என்பதை ஆராய்வோம்.


  இவர்களுடன் இணைகின்ற  கிரகங்களுக்கு ஏற்ப சில மாறுதல்கள் ஏற்படும். ஜாதகத்தை சிறப்பாக ஆராய்ந்து என்ன கல்வி பயில்வார்கள், எந்த வகையில் சிறப்பை தரும் என்பதை ஆராய்ந்து கூற வேண்டும். 


  1. மேஷம் : வேளாண் அறிவியல், மின்னணுவியல், இரசாயனங்கள், பண்டைய வரலாறு, தொழில்நுட்பம் மற்றும் இயந்திர பொறியியல், அச்சிடுதல் , பல் மருத்துவம், ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, மலை சார்ந்த காவல்துறை, ஆயுதப் பயிற்சி, விளையாட்டுத் துறை, விவசாயம், புவியியல், அறுவை சிகிச்சை மருத்துவம் தொடர்புடைய படிப்புகள் பயிலலாம்.


  2. ரிஷபம் : மருத்துவம், ஓவியம், பாடல், இசை மற்றும் நுண்கலைகள், இசைக் கருவிகள் வாசித்தல், உளவியல், வடிவமைப்பு, புகைப்படம் எடுத்தல், சிற்பம், கட்டிடக்கலை, பேசன் டெக்னாலஜி அழகுக் கலை, டெக்ஸ்டைல் டெக்னாலஜி, சித்திர வேலை, உணவு சம்பந்தபட்ட துறை, வங்கி, கருவூலம், கால்நடை துறை தொடர்பான  பயிலலாம். 


  3. மிதுனம் : பி.எட்., கலை, அச்சிடுதல், சி.ஏ, எம்.பி.ஏ, எம்.சி.ஏ., மின்னணுவியல், தொலைத்தொடர்பு. தகவல் தொடர்பு துறை, பத்திரிக்கை துறை, ஊடகம் தொடர்பான படிப்புகள், வங்கி, வணிகம், கணக்குகள், ஜோதிடம், சட்டம், கணிதம் சார்ந்த அனைத்தும், ஆடிட்டிங், நூலாசிரியர், பேராசிரியர், ஆசிரியர், அறிவு சார்ந்த ஆய்வாளர்கள்,  மார்க்கெட்டிங், புள்ளியல், நில அளவை, பத்திரப்பதிவு துறை, வணிகவியல், நூலகத்துறை, ஓவியம், பெயிண்டிங்,  போன்ற படிப்புகளை படிக்கலாம். 


  4. கடகம் : வேளாண் அறிவியல், கடல் மற்றும் கடற்படை தொடர்பான படிப்புகள், இசை, சந்தைப்படுத்தல், பொருளாதாரம், வேதியியல், மருந்தகம், ஹோட்டல் மேலாண்மை, சுற்றுலா மற்றும் ஓட்டுநர். போக்குவரத்து, மருத்துவம், கடல், கப்பல் சார்ந்த படிப்புகள்,  கல்வித்துறை, கலை, இலக்கியம், மொழி சார்ந்த படிப்புகள் பயன் தரும்.


  5. சிம்மம் : புவியியல், வரலாறு, அரசியல் அறிவியல், குடிமையியல், கணினிகள், எம்.ஏ., இலக்கியத்தில், பி.எட்., மருத்துவம், வேதியியல். இதயம், கண் சார்ந்த அறுவை சிகிச்சை மருத்துவம், சித்த மருத்துவம், சமூகவியல், அரசியல் நிர்வாகம் தொடர்பான கல்வி, மருத்துவம் தொடர்பான படிப்புகள்,  


  6. கன்னி : மருந்தகம், மருத்துவம், நரம்பியல், மின் பொறியியல், சுற்றுலா மற்றும் பயணங்கள். ஜோதிடம், வணிகம், M.B.A, சட்டம் மற்றும் நீதித்துறை, வேளாண் பொறியியல், தாவரவியல், ஜோதிடம், அமானுஷ்ய அறிவியல், குணப்படுத்துதல் தொடர்பான படிப்புகள்.

கல்வித் துறை, வணிகவியல், கணக்கியல், கணக்காளர், தணிக்கையாளர், நிர்வாக மேலாளர் போன்றவை சார்ந்த படிப்பு படிக்கலாம்.


  7. துலாம் : ஜோதிடம், கணிதம், B.com நிதி மற்றும் வங்கியியல், பொருளாதாரம், ஹோமியோபதி மருத்துவம், ஜவுளி, இசை மற்றும் நுண்கலைகள், வாகனங்கள், ஆட்டோ மொபைல், சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சட்டம். திரைப்படம், தொலைக்காட்சி, இயல், இசை, நாடகம், நடிப்பு, அழகு கலை, ஆடை, ஆபரணம், நெசவு சார்ந்த கல்விகள் .


  8. விருச்சிகம் : இரும்பு மற்றும் எஃகு, இயந்திரங்கள், இயந்திரப் பொறியாளர், வேதியியல், இரசாயனங்கள், கணினிப் பணியாளர்கள், துப்பறிவாளர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள். கனிமம், சுரங்கம், சுங்க சாவடி, விவசாயம், மின்னனுவியல், கெமிக்கல், பயோ கெமிஸ்ட்ரி, பரிசோதனை செய்யும் லேப் பற்றிய படிப்பு, இயந்திரங்கள் தொடர்பான படிப்புகள், ரேடியாலஜி, ஸ்கேனிங் தொடர்பான படிப்புகள், தகவல் தொழில்நுட்பம் ஆய்வு மையம் சார்ந்த கல்விகள் படிக்கலாம்.


  9. தனுசு : பொருளாதாரம், மதம், இலக்கியம், B. Com, Computers, C.A, Accountancy. சட்டம், நிதித்துறை, நீதித் துறை, கல்வித்துறை, ஆசிரியர், சட்டம், பொருளாதாரம், அறிவியல் சார்ந்த அனைத்து துறை படிப்புகளையும் படிக்கலாம்.


  10. மகரம் : இயற்பியல், பி.ஏ. லேப் டெக், டிப்ளமோ இன் மெக்கானிசம், உளவியல், நரம்பியல், அரசியல் அறிவியல், விவசாயம், இரும்பு, கட்டிடக்கலை, சுரங்கம், கனிமம், டைப் ரைட்டிங், வக்கீல், சட்டம், மெக்கானிக், சார்ந்த கல்விகள், பிட்டர் பாலிடெக்னிக் ஐ.டி.ஐ., மூலிகை செடி, நிலக்கரி, பாரம்பரியத்தைப் பற்றி படிப்பது சார்ந்த படிப்புகள் படிக்கலாம்.


  11. கும்பம் : பி.காம், நர்சிங், தொலைத்தொடர்பு, சி.ஏ , எலக்ட்ரிக்கல் என்ஜினியர், ஆர்க்யாலஜி, வரலாறு, புவியியல் சார்ந்த கல்விகள் அனைத்தும் பாதுகாப்பு எரிபொருள் சார்ந்த படிப்புகள் பயன் தரும்,  


  12. மீனம் : வணிகம், ஜவுளி, அச்சிடுதல் மற்றும் வெளியீடு, ஜோதிடம் மற்றும் வேத அறிவியல்.  கடல் பொறியியல். குரு குல கல்வி, மத போதகர், வங்கி பணி, ஆச்சாரியர்கள், உயிரியல், குழந்தைகள் தொடர்பான கல்வி மைக்ரோபயாலஜி, பொருளாதார நிபுணர், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படிப்புகள்.


  ஒரு குழந்தை, எந்தத் துறையில் ஆர்வமாக உள்ளதோ, அது சார்ந்த துறையில் அவர்கள் பயணிக்க உதவுவதே நல்லது.

விருப்ப படிப்பு விருப்ப தொழில் செய்ய உதவும்

நன்றி வணக்கம் 

வாழ்க வளமுடன் 

Comments