யோக கிரகமும் செயல்படும் விதமும்
ஒவ்வொரும் யோக கிரகத்தின் திசை வர வேண்டும் அல்லது திசை நடத்தும் கிரகம் லக்ன யோக கிரகத்தின் சாரம் பெற்று திசை நடத்த வேண்டும் என்று விருப்பமும் ஆவலும் இருக்கும் அந்த வகையில் லக்ன ரீதியாக எந்தெந்த கிரகங்கள் ஒவ்வொரு லக்னத்திற்கு யோக கிரகம் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே இப் பதிவு
மேஷம்
முதல் தர யோக கிரகங்கள் சூரியன் சந்திரன் இரண்டாம் தர யோக கிரகங்கள் செவ்வாய் குரு அவ யோக கிரகங்கள் சுக்கிரன் சனி புதன் இதில் சுக்கிரன் 2 7 ம் இடத்தின் அதிபதி சர லக்னகளை பொறுத்த வரை 2 7 ம் அதிபதிகள் மாரகாதிபதி என்ற அடிப்படையில் சுக்கிரன் அவ யோக கிரகம் சனி பாதகாதிபதி புதன் 3 6 ம் இடங்களின் அதிபதி எனவே இவர்களும் அவ யோக கிரகங்கள்
ரிஷபம்
முதல் தர யோக கிரகம் எனில் புதன் சூரியன் இரண்டாம் நிலை யோக கிரகம் எனில் சுக்கிரன் சனி இருவரும் அவ யோக கிரகங்கள் எனில் குரு சந்திரன் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி ஒருவனே யோகாதிபதி என்பார்கள் சனி யோகத்தை கொடுக்கும் தான் தன் திசையின் இறுதியில் பாதகத்தையும் செய்தே தீரும் சந்திரனும் குருவும் மாராகதிபதிகள் எனவே அவர்கள் முழு அவ யோக கிரகங்கள் சுக்கிரன் லக்னாதிபதி என்றாலும் ஆறாம் இடத்திற்கும் அதிபதி என்பதால் முழு யோக கிரகம் என்று சொல்ல முடியாது செவ்வாய் கிரகத்தை பொறுத்த வரை முழு யோக கிரகம் என்றும் முழு அவ யோக கிரகம் என்றும் சொல்ல முடியாது அவர் ஒரு சமமான கிரகம் தான்
மிதுனம்
புதன் சந்திரன் இருவரும் முதல் தர யோக கிரகங்கள் சுக்கிரன் சனி இருவரும் இரண்டாம் நிலை யோக கிரகங்கள் சூரியன் செவ்வாய் குரு இவர்கள் மூவரும் அவ யோக கிரகங்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி 8 ம் அதிபதி சுக்கிரன் 12 ம் இடத்தின் அதிபதி என்பதால் தான் இரண்டாம் நிலை யோக கிரகங்கள் என்கிறோம் குரு பாதகம் மற்றும் மாரக ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் 6 மற்றும் 11 ம் இடம் என்னும் இரண்டு மாரக ஸ்தானகளின் ஒன்றின் அதிபதி என்பதால் முழு அவயோக கிரகம்
கடகம்
சந்திரன் சூரியன் செவ்வாய் இவை முதல் தர யோக கிரகங்கள் குரு 6 ம் இடத்தின் அதிபதி என்பதால் இரண்டாம் நிலை யோக கிரகம் சுக்கிரன் பாதக ஸ்தானம் என்னும் 11 ன் அதிபதி சனி 8 ம் இடத்திற்கும் அதிபதி புதன் 3 12 ன் அதிபதி என்பதால் இவர்கள் மூவரும் முழு அவ யோக கிரகங்கள்
சிம்மம்
சூரியன் புதன் இருவரும் முதல் தர யோக கிரகங்கள் குரு செவ்வாய் இருவரும் இரண்டாம் நிலை யோக கிரகங்கள் குரு 8 ம் இடத்தின் அதிபதி செவ்வாய் பாதக ஸ்தானத்தின் அதிபதி சனி முழு அவ யோக கிரகம் சந்திரன் அரை அவ யோக கிரகம்
கன்னி
புதன் சுக்கிரன் இவர்கள் இருவரும் முழு யோக கிரகங்கள் சனி இரண்டாம் நிலை யோக கிரகம் சந்திரன் சூரியன் குரு செவ்வாய் இவர்கள் மூவரும் அவ யோக கிரகங்கள்
துலாம்
சனி சந்திரன் மட்டுமே முழு யோக கிரகங்கள் சுக்கிரன் புதன் இருவரும் இரண்டாம் நிலை யோக கிரகங்கள் குரு செவ்வாய் இருவரும் அவ யோக கிரகங்கள் செவ்வாய் 2 7 ம் இடத்தின் அதிபதி என்றாலும் மாரக ஸ்தானத்தின் அதிபதி என்பதால் அவ யோக கிரகம் தான்
விருச்சிகம்
குரு சூரியன் இருவரும் முழு யோக கிரகங்கள் செவ்வாய் சந்திரன் சனி சுக்கிரன் இவர்கள் நால்வரும் இரண்டாம் நிலை யோக கிரகங்கள் புதன் முழு அரை அவ யோக கிரகம் இந்த லக்னத்தை பொறுத்த வரையில் முழு அவ யோக கிரகம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது
தனுசு
குரு சூரியன் இவர்கள் இருவரும் முழு யோக கிரகங்கள் சனி செவ்வாய் இரண்டாம் நிலை யோக கிரகம் புதன் சுக்கிரன் இவர்கள் இருவரும் முழு அவ யோக கிரகங்கள் சந்திரனும் ஒரு வகையில் அவ யோக கிரகம் தான்
மகரம்
சனி சுக்கிரன் இவர்கள் இருவரும் முழு யோக கிரகங்கள் புதன் அரை யோகர் சந்திரன் செவ்வாய் சூரியன் குரு இவர்கள் அவ யோக கிரகங்கள் இதில் செவ்வாய் பாதகாதிபதி என்றாலும் குரு சூரியனை போல அவ யோக கிரகம் என்று சொல்ல முடியாது
கும்பம்
குரு சூரியன் இருவரும் யோக கிரகங்கள் சனி புதன் சுக்கிரன் மூவரும் இரண்டாம் நிலை யோக கிரகங்கள் செவ்வாய் சந்திரன் கடும் அவ யோக கிரகங்கள்
மீனம்
குரு செவ்வாய் சந்திரன் இவர்கள் மூவரும் முதல் தர யோக கிரகங்கள் சனி இரண்டாம் நிலை யோக கிரகம் சூரியன் புதன் சுக்கிரன் இவர்கள் முழு அவ யோக கிரகங்கள்
இதில் ராகு கேது இருவரும் எங்கு உள்ளார்களோ அதை பொறுத்து யோகம் மற்றும் அவ யோக அமைப்பு உண்டாகும் எந்த லக்னம் என்றாலும் 1 2 7 8 ல் இவர்கள் தனித்து நிற்கும் போது தனது திசையில் அவ யோக பலன்கள் உண்டாகும் முற்றிலும் வேறு கிரக தொடர்பு வராத போது மட்டும்
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment