வேலையா ? அல்லது தொழிலா ? உங்கள் வாழ்க்கையை எப்படி வடிவமைப்பது. உங்கள் ஜாதக கட்டம் மூலமாக அதை எப்படி கண்டுபிடிப்பது.

 வேலையா ? அல்லது தொழிலா ? உங்கள் வாழ்க்கையை எப்படி வடிவமைப்பது. உங்கள் ஜாதக கட்டம் மூலமாக அதை எப்படி கண்டுபிடிப்பது.


🌹🌹🌹 அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் .......


 🌹🌹  திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது ஆதித்தமிழர் பழமொழி. 


🌹🌹 சம்பாத்தியம் புருஷ லட்சணம் என்றும் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்டிருப்போம்.


 🌹🌹   அறிவியல் முன்னேற்றத்தால் மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய இன்றைய உலகில் பொருள் தேடுவதும் பணம் சம்பாதிப்பதும் மிக முக்கியமான கடமையாகிவிட்டது ஒவ்வொரு மனிதர்களுக்கும்.


🌹🌹 இதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் எல்லாம் நீங்கி இரண்டு பாலினத்தின் அவரும் பொருள் தேடினால் மட்டுமே அதாவது ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி  இருவரும்  உழைத்தால் மட்டுமே மட்டுமே வாழ்க்கைக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது    . 


 🌹🌹🌹    இதில் ஒரு சிலருக்கு சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் எண்ணங்கள் உண்டு.      

                 

❇❇❇ 🍂❇ ஒரு சிலர் வேலையை நோக்கி பயணிப்பதும் தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை பார்ப்பதையும் விரும்புவார்கள். 


.💐💐💐 இதில் உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் உதவக்கூடிய நமது ஜோதிடக்கலை உங்கள் ஜாதக கட்டத்தில் வேலையை நோக்கி பயணிப்பதாக அல்லது தொழிலை நோக்கி பயணிப்பது என்பதை தெரிந்துகொள்ள தனக்குள் எத்துணை ஜோதிட விதிகளை ஒளித்து வைத்துள்ளது என்பதை விவரிக்க கூடியது இந்த பதிவு.


💐🌷🌷 ஒரு தனிமனித ஜாதக கட்டத்தில் உள்ள 12 பாவங்களிலும் நிறைய சூட்சமங்கள் உண்டு.


💐🌷🌻 இதில் ஒரு ஜாதக கட்டத்தில் இலக்கினத்தில் இருந்து இனி வரக்கூடிய ஆறாவது பாவம் வேலையை குறிக்கக் கூடியது.


💐🌷🌻🌺 அதைப்போலவே இலக்கினத்திலிருந்து எண்ணி வரக்கூடிய பத்தாவது பாவகம் தொழிலை குறிக்கக்கூடியது.


💐🌷🌻 பத்தாவது பாவத்திற்கு தொழில் ஸ்தானம் கர்ம ஸ்தானம் என்றெல்லாம் பெயர்களும் உண்டு.


💐🌷🌻 இந்த இரண்டு  பாவகங்கள் மேலும் சில விதிகள், மற்றும் கிரக அமைப்புகள் உங்கள் ஜாதக கட்டத்தில் எதை முடிவு எடுக்கலாம் என்பதை நிர்ணயிக்கும்.


💐🌷🌷 பொதுவாக ஜோதிட மூல நூல்கள் விதிகளின்படி ஆறாவது பாவகத்தில் பாவ கிரகங்கள் இருப்பது சிறப்பு என வழிகாட்டுதல் செய்யப்பட்டுள்ளன.


💐💐💐💐 ஆனால்  அதேநேரத்தில் பாவ கிரகங்கள் இருக்கும் பாவம் தனது செயல்படும் திறனை சற்று இழக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. 


.💐💐💐 ஆக ஆறாவது பாவகத்தில் பாவ கிரகங்கள் இருப்பது என்று மற்ற விஷயங்களுக்கு உகந்தது என்றாலும் வேலை போன்ற அமைப்புகளை தடை செய்யும் என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


💐🌷🌷 தொடர்ச்சியாக நிரந்தரமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு இல்லாமல் போவது, ஆறாவது பாவகத்தில் பாவகிரகம் இருப்பதன் எதிரொளிப்பு.


💐🌷🌻 அதைப்போலவே ஆறாம் பாவகம் ஆறாம் பாவத்தின் அதிபதி வலுவிழக்கும் பொழுது வேலைக்கு செல்வது மாதம் ஒரு வேலையை தேடுவது போன்ற சம்பவங்கள் பிரதிபலிக்க காரணமாகிவிடும்.


💐🌷🌻 ஆறாவது பாவகத்தில் பாவகிரகங்கள் இருக்குமாயின் அரசுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கக் கூடிய அமைப்புகளையும் தடைசெய்யும் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


💐🌷🌻 ஆக ஆறாவது பாவகத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் ஆறாவது பாவத்தின் அதிபதி சற்று வலுவாக இருப்பதும் ஒரு நிரந்தர வேலை வருமானம் போன்றவைகளுக்கு வழிவகுக்கும்.


💐🌷🌻 தொழில் செய்ய கிரக நிலைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.


💐🌷🌷 ஜாதகப்படி பத்தாம் பாவத்திற்கு தொழில் ஸ்தானம் என்று பெயர்.


💐💐💐 இது கேந்திர ஸ்தானம் என்பதால் இங்கு சுப கிரகங்கள் அல்லது பாவ கிரகங்கள் எதுவும் இருப்பது தடை என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 


.💐💐💐 அதிலும் மிக முக்கியமாக ஜோதிட விதிகளின் படி லக்கினத்தின் பத்தாம் பாவத்தில் இயற்கை பாவ கிரகங்கள் என்று சொல்லப்படக்கூடிய சூரியன் மற்றும் செவ்வாய் திக்பலம் அடைவது குறிப்பிடத்தக்கது.


💐🌷 அதாவது திக்பலம் என்பது தனது காரகம் சார்ந்த நல்ல நன்மைகளை அந்த ஜாதகருக்கு அந்த கிரகம் தரும் என்பது பொருள்.


💐🌷🌻 ஜோதிட மூல நூல்கள் வழிகாட்டுதல்படி பத்தாம் பாவத்தில் ராகு அல்லது கேது இருந்தால் கூட தடை கிடையாது.


💐🌷🌻 ஆக பத்தாம் பாவகத்தில் பாவ கிரகங்கள் இருப்பதால் ஒன்றும் தவறு கிடையாது, 


💐🌷🌻 ஆனால் அதே நேரத்தில் ஆறாம் பாவத்தில் பாபகிரகங்கள் அல்லாமல் சுபகிரகங்கள் இருப்பது சிறப்பு என்று கூறப்பட்டாலும் சுப கிரகங்களான குரு அல்லது சுக்கிரன் ஜாதக கட்டத்தில் மறைவதும் அவ்வளவு யோகம் கிடையாது.


💐🌷🌻 ஆக பாவக ரீதியாக ஆறாம் பாவத்தில் சுபக்கிரகங்கள் இருந்தால் வேலை சார்ந்த அமைப்புகளுக்கு நன்மை.


💐🌷🌷 பத்தாம் பாவகம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை தொழில் செய்யும் அமைப்புகள் ஓரளவுக்கு பலன் தரும் என்று இதுவரை நாம் கண்டுபிடித்து உள்ளோம்.


💐💐💐 தொழில் செய்வதற்கு பத்தாம் பாவகத்தின் துணை எவ்வளவு தேவையோ ?  அதைப்போலவேகிரகங்கள் மற்றும் தசா புத்திகளின் அமைப்பும் தொழில் செய்வதற்கு மிக உகந்தவை என்பதை முதலில் கணக்கிட வேண்டும். 


.💐💐 பொதுவாக தொழில் என்று ஒரு வார்த்தைக்குள் நாம் அடைத்துக் கொண்டாலும் தொழில் என்பதற்கு பல்வேறு வகைகள் உண்டு.


💐🌷🌷🌷 பெரிய அளவில் முதலீடு செய்து உதவிக்கு ஆட்கள் வைத்து அலுவலகம் போல் அமைத்து செயல்படும் தொழில் முதலீடுகள் ஒருபுறம்.


💐🌷🌻 அடுத்தவர்கள் உதவியை எதிர்பார்க்காமல் சிறிய அளவில் முதலீடு செய்து ஒருவர் மட்டும் தனியாக இருந்து செய்யும் தொழில்கள் ஒருபுறம்.


💐🌷🌻 உங்களது ஜாதக கட்டத்தில் சூரியன் நல்ல சுப கிரகங்களின் தொடர்பு உடனும் சனி சற்று பலமாக இருந்தால் பெரி பெரிய அளவில் தொழில் முதலீடு செய்து நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் தகுதி உங்களுக்கு உண்டு.


💐🌷 சூரியன் மற்றும் சனி குறைவான வலுவுடன் உங்களது ஜாதகத்தில் இருந்தால் பெரிய முதலீடுகள் தவிர்த்து தனி ஒரு மனிதனாக சிறிய முதலீட்டுடன் தொழில் செய்யும் யோகம் உங்களுக்கு உண்டு.


💐🌷 தொழில் என்ற பிரதான அமைப்புக்குள் நீங்கள் சொல்லக் கூடிய காலங்கள், மறைவு ஸ்தானங்கள் என்று சொல்லப்படக்கூடிய ஆறாம்  பாவகம் எட்டாம்  பாவகம் பன்னிரண்டாம்  பாவகம் மற்றும் மூன்றாம்  பாவகம்தொடர்புகள் இல்லாத பொழுது  தொழில் சார்ந்த விஷயங்களை கையில் எடுக்கவேண்டும் என்பது எப்பொழுதும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


💐🌷 இதிலும் நாம் செய்யும் தொழிலின் லாபத்தின் அளவீடுகள் என்பது நமது ஜாதகத்தில் யோகத்திற்கும் வரும் என்பதால் பெரும்பாலும் லக்கின பாவகம் ஐந்தாம் பாவகம் ஒன்பதாம் பாவகம் சிறப்பாக இருக்கக்கூடிய மனிதர்கள் தொழிலை தேர்ந்தெடுப்பது இன்னும் நலம்.


💐💐 லக்கின பாவகம் ஐந்தாம் பாவகம் ஒன்பதாம் பாவகம் இவையெல்லாம் நன்றாக இருந்து வரக்கூடிய தசைகள் அனைத்தும் இதே அமைப்புள்ள தசைகளாக இருந்து 2, 11ஆம் பாவகங்கள் நன்றாக இருந்தால் செய்யும் தொழிலில் நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டு. 


.💐💐💐 இனி ஆறாம் பாவகம் நன்றாக இருந்தால் வேலையை தேர்ந்தெடுக்கலாம் என்று கூறியது போலவே வேலை என்றாலும் வேலையில் பேர் வாங்க கூடிய யோகம் யாருக்கெல்லாம் உண்டு என்று பார்க்கலாம்.


💐🌷🌷 கிரகங்களில் சூரியன் மற்றும் சனி பலமாக இருந்து ஆறாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய தசாபுத்திகள் நடப்புக்கு வந்தால்கூட ஒரு நிறுவனத்தில் தலைமை தாங்கும் அமைப்புடன் நிறைய பேருக்கு வேலை சொல்லும் தகுதி ஒருத்தருக்கு அமையும்.


💐🌷🌻 ஆறாம் பாவகம் தொடர்பு கொள்ளாமல் சனி மற்றும் சூரியன் பலமாக இருந்து தசை அனைத்தும் சற்று யோக திசையாக அதுவும் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகங்கள் இந்த  திசையாக நடப்புக்கு வந்தாள் வேலையை விட தொழிலை மனதில் நேசிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.


💐🌷 இதிலும் ஒரு சில நிலைகளில் நன்றாக தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் வேலையில் இருப்பவர்களுக்கு கூட, ஏழரைச் சனி அஷ்டமத்துச் சனி காலங்களும் தசை அளவுகளில் 8, 12ஆம் தசைகள் தொடர்பு கொண்டால் சற்று சிரமங்கள் இருக்கும்


💐🌷🌻 அது போன்ற சூழல்களில் சிரமப்பட கூடியவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் வழிகாட்டுதல் செய்து வருகிறேன்.


💐🌷 விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு பலன்   பெறலாம்.


💐🌷🌷 இறைவன் அருளால் எல்லோரும் நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடைபெறுகிறேன்.



Comments