நம் உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி (ரகசியம்) தெரியுமா?

 நம் உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி (ரகசியம்) தெரியுமா?


🌹 🌿 நம் பாதங்களில் வசிப்பவள் *ஆதிலஷ்மி.*

🌹 🌿 நம் பாதம் பிறர் மீது தெரியாமல் பட்டால் *சிவ சிவ* எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் *ஆதிலஷ்மி* நம்மை விட்டு விலகி விடுவாள்.

🌹 🌿 நம் முழங்கால் பகுதியில் வசிப்பவள் *கஜலஷ்மி.*

🌹 🌿 காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும்

நெல் .. அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு *கஜலட்சுமி* விலகுகிறாள்..!!

🌹 🌿 நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் *வீர்யலஷ்மி..!!*

 வசிக்கிறாள். 

🌹 🌿 பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த *வீர்யலஷ்மி* விலகுகிறாள்.

🌹 🌿 நம் இடது தொடையில் வசிப்பவள் *விஜயலஷ்மி.*

🌹 🌿 இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தம். எனவே

மனைவியை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த *விஜயலக்ஷ்மி* விலகி விடுவாள்.!!

🌹 🌿 வலது தொடையில் வசிப்பவள் *சந்தானலஷ்மி...!*

🌹 🌿 பெற்றோர்கள்  கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும்.

இடது தொடையிலோ .. இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த *சந்தானலஷ்மி* விலகி விடுவாள்...!!

🌹 🌿 நமது வயிற்றுப் பகுதியில் வசிப்பவள் *தான்யலஷ்மி...!*

🌹 🌿 எச்சில் உணவு... ஊசிப் போன உணவு இவைகளை ஏழைக் களுக்கோ .. பிறருக்கோ கொடுத்தால் *தான்ய லட்சுமி* விலகி விடுவாள்.

🌹 🌿 நமது நெஞ்சுப் பகுதியில் வசிப்பவள் *தைரியலஷ்மி..!!*

🌹 🌿 நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறை கூறி குடும்பத்தை கொடுப்பவர்களை விட்டு *தைரிய லட்சுமி* விலகுகிறாள்.

நமது கழுத்துப் பகுதியில் வசிப்பவள் *வித்யாலஷ்மி...!!*

🌹 🌿 கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும் .. பூணூல்... தாலி... என குடும்ப பராம்பரிய சின்னத்தை 

 அணியாதவர்களை விட்டு *வித்யா லட்சுமி* விலகுகிறாள்.

🌹 🌿 நம் நெற்றியின் மத்தியில் வசிப்பவள் *செளபாக்யலஷ்மி.!!*

🌹 🌿 இவள் நம் புருவத்தை சிரைப்பதாலும் மஞ்சள் கலந்த குங்குமம் விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாலும்  , வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும் வீபூதி . நாமம் .. அணியாவிட்டாலும் நம்மை விட்டு *சௌபாக்ய லட்சுமி* விலகுகிறாள்..

🌹 🌿 பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மி களை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்.?

🌹 🌿 இந்த தகவல்கள் அனைத்தும் மகா மந்திர போதிணி என்ற அபூர்வ நூலில் உள்ளது...

நன்றி வணக்கம் 🙏🏻

வாழ்க வளர்க 🤲

வாழ்க வையகம் 🙌

வாழ்க வளமுடன்


Comments