மனைவியுடன் தாம்பத்யம் நீண்ட காலம் சிறக்க என்ன செய்யலாம்?
முதல்ல தாம்பத்யம் என்பதற்கு சரியான் பொருள் தெரிஞ்சுக்குங்க….
உடல் உறவு மட்டுமே தாம்பத்யம் அல்ல…. காதல் வாழ்வு மட்டுமே தாம்பத்யம் அல்ல…
தாம்பத்யம் என்பது கணவன் மனைவி இருவரிடமும் உள்ள நிறை குறைகளை ஒருவருக்கொருவர் நன்கு உணர்ந்து, அதற்கேற்ப சகிப்புத் தன்மையுடன் விட்டுக் கொடுத்து, மீறி தவறிழைக்கும் பட்சத்தில் பொறுமையாக ஒருவரை மற்றவர் திருத்தி மனதளவில் பக்குவப்படுத்தி மீண்டும் அதே தவறு நேராமலும், அனுபவப் பாடம் மூலமாக வேறு தவறுகளையும் நேர விடாமலும் வாழ்க்கை எனும் ஓடத்தினை வசந்த கால மன நிலையுடன் இறுதி வரை ஓட்டி சம்சார சாகரத்தினை கடப்பதே உண்மையான தாம்பத்யம் என்பதாகும்….
இங்க எத்தன பேரு இந்த அர்த்தத்துல வாழ்க்கைய வாழுறீங்க.. தெரியல….
ஆக இன்னொரு முறை மட்டுமல்ல .. தாம்பத்யம் என்பதற்கு சரியாக பொருள் தெரிந்து கொள்ளும் வரை இந்த பதிலை இம்பொஸிஷன் போல் மீண்டும் மீண்டும் முதலில் இருந்து படித்து அதற்கேற்ப தங்களை மனதளவில் தயார் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்தால் தாம்பத்யம் நீண்ட காலம் மட்டுமல்ல … வாழ்வின் இறுதிப்பயணம் வரை எக்காலமும் சிறப்பாகவே இருக்கும்….
எதெதுக்கோ ரோல் மாடல்னு சொல்றீங்க….
உங்களை பலர் ரோல் மாடலாக கொள்ளும் விதமாக இப்படி ஒரு முறை வாழ்ந்து தான் காட்டுங்களேன்.. இல்ல … வாழ்ந்து தான் பாருங்களேன்…..
என்ன குறைஞ்சிடப் போகுது…. இதனால……
நன்றி வணக்கம் 🙏🏻
வாழ்க வளர்க 🤲
வாழ்க வையகம் 🙌
Comments
Post a Comment